பொதுத் தேர்தல் : வடக்கு, கிழக்கில் அதிக சுயேட்சைக் குழுக்கள் போட்டி

Ampara Jaffna Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka General Election 2024
By Laksi Oct 09, 2024 10:17 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இந்த முறை அதிக சுயேட்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 22 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.

இதேபோன்று வன்னி மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

அதிக சுயேட்சைக் குழுக்கள்

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்களாகவும் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது.

பொதுத் தேர்தல் : வடக்கு, கிழக்கில் அதிக சுயேட்சைக் குழுக்கள் போட்டி | North And East More Independent Groups Paid Bills

இதேநேரம் சுயேட்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்னமும் காணப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 12 சுயேட்சைக் குழுக்களுமே கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW