ஐந்து நாட்களின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட மாணவனின் ஜனாஸா நல்லடக்கம்

Climate Change Accident Weather Floods In Sri Lanka Nintavur
By Rakshana MA Nov 30, 2024 12:13 PM GMT
Rakshana MA

Rakshana MA

நிந்தவூர் மத்ரஸா மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் முஅல்லா மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக்கின் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெரும் திரளான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலநிலை சீராகியும் ஆபத்திலுள்ள வடமாகாணம்!

காலநிலை சீராகியும் ஆபத்திலுள்ள வடமாகாணம்!

மீட்கப்பட்ட ஜனாஸாக்கள்

காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த நிலையில் அன்றைய தினம் மாலை மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த மீட்பு பணியில் பாதுகாப்பு படையினரும், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பும் முழுமையாக ஈடுபட்டு வந்ததுடன் அவர்களுக்கு உதவியாக சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை மற்றும் காரைதீவு இளைஞர்கள் அமைப்பினரும் ஈடுபட்டிருந்தனர்.

ஐந்து நாட்களின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட மாணவனின் ஜனாஸா நல்லடக்கம் | Nintavur Student S Body Found After 5 Days

இதனை தொடர்ந்து வெள்ளம் தணிந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் இடம்பெற்று வந்தது.

எனினும் இதுவரை மொத்தமாக 08 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் 06 ஜனாஸாவும், வாகன சாரதியின் ஜனாஸாவும், இன்னும் ஒரு இளைஞரின் ஜனாஸாவுமாக மொத்தம் 08 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டது.

இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் : கிளிநொச்சியில் வடிந்தோடும் வெள்ளம்

இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் : கிளிநொச்சியில் வடிந்தோடும் வெள்ளம்

தொடரும் தேடுதல் பணி

இதற்கிடையில் மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று(30) காலை ஒரு ஜனாஸா கண்டெடுக்கப்பட்டிருந்தது .

இது நிந்தவூர் மத்ரஸா மாணவன் மௌலவி கலீல் தஷ்ரீப் அவர்களின் ஜனாஸா ஆகும். மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

ஐந்து நாட்களின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட மாணவனின் ஜனாஸா நல்லடக்கம் | Nintavur Student S Body Found After 5 Days

மீட்பு பணியின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஜனாஸாக்கள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கிண்ணியாவில் நீரில் மூழ்கிய வயல்கள் : கவலையில் விவசாயிகள்

கிண்ணியாவில் நீரில் மூழ்கிய வயல்கள் : கவலையில் விவசாயிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery