தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் நிந்தவூர் அல் அஷ்ரக் பாடசாலை மாணவன் சாதனை
கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சேர் ஜோன் ரபட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் - 2024 நிகழ்ச்சியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.
இப்போட்டி நிகழ்ச்சியானது கடந்த மூன்று நாட்களாக மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
மெய்வல்லுனர் போட்டி
தேசிய மட்ட சேர் ஜோன் ராபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இரண்டாம் நாளான (19) நேற்று கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாக 12 வயது பிரிவைச் சேர்ந்த முஹம்மட் ஹாரீஸ் முஹம்மட் கின்சான், 80 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் 11 வினாடியில் ஓடி முடித்து 3ம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்
இவரை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மாணவனை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் ஏ. ஹலீம் அஹமட் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து ஒத்துழைப்பு வழங்கும் மாணவனின் பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் அஷ்ரக்கியன் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |