நிந்தவூர் பிரதேச சபையின் முதல் கூட்ட அமர்வு

Sri Lankan Peoples Eastern Province Nintavur
By Rakshana MA Jul 15, 2025 09:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது சபை கூட்டமர்வு நடவடிக்கைகள் நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின.

காசாவில் இஸ்ரேலின் வதை முகாம்..!

காசாவில் இஸ்ரேலின் வதை முகாம்..!

முக்கிய கலந்துரையாடல் 

குறித்த  நிகழ்வில் மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.

நிந்தவூர் பிரதேச சபையின் முதல் கூட்ட அமர்வு | Nintavur Council S First Session 2025

பின்னர் ஆலோசனை குழுக்கள் நியமித்தல் நிதி மற்றும் கொள்கை உருவாக்க குழு, வீடமைப்பு சமூக அபிவிருத்திக் குழு, தொழிநுட்ப சேவைக் குழு ,சுற்றாடல் வாழ் வசதி, செலவினம் தொடர்பாக நிதிப்பிரமாணம் அதிகாரம் அளித்தல்,கொடுப்பனவு அங்கீகாரம் அளித்தல், காசோலையில் கையொப்பமிடும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்தல், மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்டுள்ள PSDG,CBG, AIP வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்ட்து.

அதேவேளை, செலவு தொடர்பாக தவிசாளரினால் நேரடியாக அனுமதி வழங்கும் உச்ச எல்லை தொடர்பாகவும், பெறுகை நடைமுறை குழுக்கள் தாபித்தல்,பெறுகைக் குழு,விலை மதிப்பீட்டுக் குழு,ஏற்றுக்கொள்ளும் குழு,தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டன.

மக்களது ஆசைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கம்..!

மக்களது ஆசைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கம்..!

ஆராயப்பட்ட பிரச்சனைகள்

தொடர்ந்து, சபையில் வரவு செலவு திட்டம் 2025 தொடர்பாகவும் பிரதேச சபையின் PE 8362 வாகனம் மற்றும் ஏனைய வாகனங்களின் திருத்தம் தொடர்பாகவும், LDSP திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட Cooling center, வெளவால் ஓடை பீச் பார்க் மற்றும் விளம்பரப் பலகைகளை வாடகைக்கு விடுதல் சம்பந்தமாகவும்,சபைக்குரிய மனுக்கள் கடிதங்கள் முறைப்பாடுகள் பரிசீலித்தல், பாதையினை செப்பனிடல்,வடிகான் மூடியிடல், LED Bulb பொருத்துதல், கடற்கரை அமைந்துள்ள பெரிய மின் விளக்கு தொகுதிகள் நான்கினை பழுது பார்த்தல் குறித்தும் ஆராயப்பட்டன.

நிந்தவூர் பிரதேச சபையின் முதல் கூட்ட அமர்வு | Nintavur Council S First Session 2025

இறுதியாக தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிற்கான கொடுப்பனவுகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவு, ஓய்வு நாள் கொடுப்பனவு, இடர்கடன் கொடுப்பனவு சம்பந்தமான தீர்மானம், மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல், முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்

தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery