தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன் உள்நுழைந்த மாணவர்கள்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் விழா முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது, நேற்று (01) ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பீடாதிபதி அஷ்-ஷெய்க் எம்.எச்.ஏ.முனாஸ் தலைமையிலான நிர்வாகமும், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
எதிர்கால நோக்கு
உபவேந்தர் தனது உரையில், புதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, இலவச கல்வி என்பது நாட்டில் வெகுசிலருக்கே கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு என தெரிவித்தார்.
அதேவேளை, இந்த வாய்ப்பை மாணவர்கள் பொறுப்புடன் பயன்படுத்தி, நாடு எதிர்பார்க்கும் நேர்மையான பிரஜைகளாக வளர வேண்டும் குறிப்பிட்டார்.
அவர் மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அனைத்து சமூக மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கும் ஒரு பிரத்யேக உயர்கல்வி நிறுவனமாக இருப்பதாக தெரிவித்தார்.
மாணவர்கள் விதிகள், ஒழுங்குகள், மற்றும் ஒழுக்கத்தை பின்பற்றி, கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும், வன்முறை மற்றும் பகிடிவதை போன்ற செயல்களில் ஈடுபடாமல், சமத்துவத்தை பேணும் நடத்தை மிக முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
பெற்றோர், மாணவர்களின் பல்கலைக்கழக கல்விக் கட்டத்தை முடிக்கும் வரை, கண்காணிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பகிடிவதை எதிர்த்த பிரகடனம் இந்த விழாவில், இரண்டாம் ஆண்டு மாணவர்கள், புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, பகிடிவதை முற்றாக நிராகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர்.
நூல் வெளியீடு
அதில், “2023/2024 மாணவர்களை எந்தவித உடல் அல்லது உளவியல் பாதிப்புக்கும் உட்படுத்தாமல், சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்வோம்” என்ற உறுதிமொழி தெளிவாக இடம்பெற்றது.
சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.அஹமட் ரியாத் ரூலி திணைக்களத் தலைவர்கள் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.நஹ்பீஸ் மற்றும் கலாநிதி ஏ.எம்.றாசீக் தங்களது உரைகளில் துறை சார்ந்த பயன்கள், வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.
பீடாதிபதி அஷ்-ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ், பீடத்தின் வளர்ச்சி பாதைகள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஆதரவுகள் பற்றி உரையாற்றினார்.
மேலும், மாணவர் வழிகாட்டி நூல் வெளியீடு மற்றும் பகிடிவதை எதிர்ப்பு பிரகடனம் நிகழ்வின் முக்கிய அம்சங்களாக இருந்தன.
அத்துடன், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.சி.எஸ்.ஷதிஹ்பா பங்கேற்பாளர்கள் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா, நூலகர் எம்.எம்.றிபாவுடீன், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும், திணைக்களத் தலைவர்களும், கல்வி மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும், பெற்றோர்களும் விழாவில் பங்கேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








