புதிய டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
By Shalini Balachandran
புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகம் (Ministry of Digital Economy) தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்படும் என துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டை
அத்தோடு, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துக்கொள்ள இந்திய அரசு இலங்கைக்கு ரூபா 10.4 பில்லியன் மானியம் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |