400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்
புதிய அரசாங்கமானது பொறுப்பேற்று 13 நாட்களிலே 419 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கமானது வரையறை ஏதும் இன்றி கடன்களை பெற்றுக்கொண்டு வருகின்றது.
நிவாரணங்கள்
இவ்வாறு கடன்கள் பெற்ற போதிலும் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் கொடுக்கவில்லை.
ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கு 3000 ரூபா கொடுப்பனவினை இதுவரையில் செலுத்த முடியாத நிலைமையும் உருவாகியுள்ளது.
மேலும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டிருந்தனர். அதுவும் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
பணப்பறிமாற்றம்
புதிய அரசாங்கமானது கடந்த சில நாட்களாக 32.23 பில்லியனும், மணித்தியாலம் ஒன்றிற்கு 1.34 பில்லியனும் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் கடந்த 2ஆம், 9ஆம், 11ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் மொத்தமாக 419 பில்லியன் பணத்தினை திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரக் கடன்கள் மூலம் பெற்றுள்ளதாக ரோஹினி கவிரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |