வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) வாக்களிக்கவுள்ளோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சூழ்நிலைகளால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாமல் போய்விடுமோ என்ற நியாயமான அச்சம் உள்ள வாக்காளர்கள் மாற்று இடத்தில் வாக்களிக்கக் கோரலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்புமனு அறிவிப்பு
இந்த மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையானது ஏதேனும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வேட்புமனு அறிவிப்பு வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குள், ஆகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விண்ணப்பத்திலும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை எண் மற்றும் அவர்கள் வசிக்கும் கிராம சேவையாளரின் சான்றிதழும் இருக்க வேண்டும்.
மேலும், இந்தச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பத்திற்கான தேவையான தகவல்களை 2024 ஆம் ஆண்டிற்கான செல்லுபடியாகும் ஒருங்கிணைந்த வாக்காளர் பதிவேட்டிலும் அனைத்து மாவட்ட செயலகங்கள், கச்சேரிகள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் www.elections.lk என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்வையிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |