அரச வீடுகளுக்காக வரிசையில் நிற்கும் எம்.பிக்கள்..!
கொழும்பிலுள்ள அரச வீடுகளை பெற்றுக் கொள்ள இதுவரையில் 80 உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியில் இருந்து வீடுகளைப் பெறுவதற்காகவே குறித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சுமார் 60 பேர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு ஒதுக்கீட்டுப்பணி
இதற்கிடையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7பேர் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியில் இருந்து வெளியேறாமல் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த 7 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் வீடுகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து வீடுகள் ஒதுக்கீட்டுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
முன்னுரிமை வழங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதில் கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர் தூரத்தினுள் சொந்த வீடுகள் இல்லாத வெளிமாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டது போல புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை கையளிப்பதற்காக குறித்த குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, சுமார் 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வீடுகள் ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |