நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் உயிரிழப்பு

Ampara Badulla Puttalam Sri Lanka Climate Change
By Laksi Nov 28, 2024 10:33 AM GMT
Laksi

Laksi

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம், பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

சீரற்ற காலநிலை

21 மாவட்டங்களின் 175 பிரதேச செயலகப் பிரிவுகளில் 98,635 குடும்பங்களைச் சேர்ந்த 330,894 பேர் சீரற்ற காலநிலையினால் இன்று (28) காலை வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் உயிரிழப்பு | 12 People Died Due To Inclement Weather In Sl

82 வீடுகள் முழுமையாகவும் 1,465 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 267 பாதுகாப்பான இடங்களில் 8,358 குடும்பங்களைச் சேர்ந்த 26,625 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.  

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW