வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்: அரசாங்கத்தின் தீர்மானம்

Advanced Agri Farmers Mission Sri Lanka Government Ministry of Agriculture
By Laksi Mar 01, 2025 09:40 AM GMT
Laksi

Laksi

வன விலங்குகளால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கத்தால் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் கே.டி. திரு. லால்காந்தாவின் (K. D. Lalkantha) அறிவுறுத்தலின் பேரில் அந்த அமைச்சின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளார்.

அத்தோடு, இந்த சிறப்புக் குழுவில் மேலும் 15 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

தேவையான தலையீடு

இந்தக் குழுவால் முன்மொழியப்படும் அனைத்து பரிந்துரைகளும் மார்ச் மாத இறுதிக்குள் விவசாய அமைச்சரிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்: அரசாங்கத்தின் தீர்மானம் | New Initiative By Govt Good News For Farmers

காட்டு விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுப்பது மற்றும் விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளை நிர்வகிப்பது குறித்து இந்தக் குழு தற்போது மதிப்பீடு செய்து வருகிறது.

மேலும், பல ஆண்டுகளாக உருவாகியுள்ள இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போதைய அரசாங்கம் தேவையான தலையீடுகளை எடுக்கும் என்றும், இந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்படும் எனவும் விவசாய அமைச்சர் கே.டி. திரு. லால்காந்தா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW