சம்மாந்துறையில் புதிய உதவி பிரதேச செயலாளர் பொறுப்பேற்பு

Sri Lankan Peoples Eastern Province Sammanthurai
By Rakshana MA Aug 18, 2025 11:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை (Sammanthurai) உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று (18) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளார்.

இவருக்கான நியமனமானது அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலையில் போராட்டத்தில் குதித்த மக்கள்

திருகோணமலையில் போராட்டத்தில் குதித்த மக்கள்

புதிய உதவி பிரதேச செயலாளர்

நிந்தவூரினை பிறப்பிடமாக கொண்ட இவர், இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தரத்தினை சேர்ந்த வாஸீத் அஹமட், பதியத்தலாவ, மகாஓயா ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

சம்மாந்துறையில் புதிய உதவி பிரதேச செயலாளர் பொறுப்பேற்பு | New Divisional Secretary For Sammanthurai

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.முஹம்மட் அஸ்லம், நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.றினோஸா உட்பட பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கசிந்த கொலைப் பட்டியல்... பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாட தொடங்கியுள்ள ஈரான்

கசிந்த கொலைப் பட்டியல்... பிரித்தானிய உளவாளிகளை வேட்டையாட தொடங்கியுள்ள ஈரான்

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள்

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காமல் செயல்படும் மக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery