அறநெறி ஆசிரியர்களுக்கு புதிய கொடுப்பனவு

Sri Lanka Sri Lankan Peoples Money Teachers
By Rakshana MA Jul 08, 2025 12:24 PM GMT
Rakshana MA

Rakshana MA

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஒரு வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்த அறநெறி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/ வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சுற்றுலாப்பயணிகள் மீது கொடூர தாக்குதல்

திருகோணமலையில் சுற்றுலாப்பயணிகள் மீது கொடூர தாக்குதல்

ஆசிரியர் கொடுப்பனவு 

இந்த முடிவு 2026 ஆம் ஆண்டு முதல் புத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் செயற்படுத்தப்படும்.

அறநெறி ஆசிரியர்களுக்கு புதிய கொடுப்பனவு | New Allowance For Moral Teachers

எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்கு அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீாரம் வழங்கியது.

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி...சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி...சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!

கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW