நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி...சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

IMF Sri Lanka Income Tax Department Value Added Tax​ (VAT) Income Tax Return
By Rakshana MA Jul 08, 2025 06:14 AM GMT
Rakshana MA

Rakshana MA

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.

இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

கந்தளாய் பாலத்தில் குடைசாய்ந்த டிப்பர்..பலத்த சேதத்துடன் மீட்பு!

கந்தளாய் பாலத்தில் குடைசாய்ந்த டிப்பர்..பலத்த சேதத்துடன் மீட்பு!

புதிய வரி 

சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி...சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு | Property Tax Plan From 2027 In Srilanka

இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை...வெளியான முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை...வெளியான முக்கிய அறிவிப்பு

புடின் பதவி விலக்கிய சிறிது நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அமைச்சர்

புடின் பதவி விலக்கிய சிறிது நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அமைச்சர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW