புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

Sri Lanka Sri Lanka Police Investigation Ministry Of Public Security
By Laksi Sep 27, 2024 12:16 PM GMT
Laksi

Laksi

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷபந்து தென்னகோன், அந்தப் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இந்நிலையிலேயே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பதில் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் திணைக்களத்தில் 36 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வரை பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியாவார்.

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் | New Acting Igp Appointed Priyantha Weerasuriya

அத்தோடு, இதற்கு முன்னர் இவர்  குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் வழங்கல் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW