ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
SJB
Sajith Premadasa
Sri Lanka
By Laksi
இந்த ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
பதவி நியமனங்கள்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (27) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |