ஹவுதி தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் : பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்ட நெதன்யாகு

Missile Israel Yemen Israel-Hamas War
By Rakshana MA Mar 20, 2025 01:03 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஏமனில்(Yemen) இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டார்.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் சைரன்கள் இயக்கப்பட்ட பின்னர், தங்குமிடங்களுக்குச் செல்லும் போது 13 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்

தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்

விமானத் தாக்குதல்

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டத்தில் வாக்களிக்கத் தயாராகும் நாடாளுமன்ற அமர்வில் ஜெருசலேமில் பங்கேற்று விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததை அடுத்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாடாளுமன்றிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஏவுகணை

முன்னதாக, டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் மத்திய இஸ்ரேலில் ஏமனில் இருந்து ஏவுகணை வருவது கண்டறியப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய உள்நாட்டு முன்னணி கட்டளை, இஸ்ரேலிய வான்வெளியில் நுழைவதற்கு முன்பு ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பின்னர் அறிவித்ததாக ஒரு அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹவுதி தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் : பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்ட நெதன்யாகு | Netanyahu Evacuated After Missile Fired From Yemen

இருப்பினும், இஸ்ரேலிய இராணுவத்தின் அறிக்கைக்கு மாறாக, எல்லையைத் தாண்டிய பிறகு ஏவுகணை இடைமறிக்கப்பட்டது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பில் க.பொ.த சாதாரண தர பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குளறுபடி : எழுந்துள்ள சர்ச்சை

மட்டக்களப்பில் க.பொ.த சாதாரண தர பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குளறுபடி : எழுந்துள்ள சர்ச்சை

QR code மூலமான முறைப்பாடுகள்! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

QR code மூலமான முறைப்பாடுகள்! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW