கல்முனையில் டெங்கு தடுப்பு பரிசோதனை முன்னெடுப்பு

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Eastern Province Kalmunai Public Health Inspector
By Rakshana MA May 21, 2025 12:15 PM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறையில் இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட  டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இச்சோதனை நடவடிக்கையானது, பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய டெங்குவாரத்தினை முன்னிட்டடு கடந்த 19ஆம் திகதியிலிருந்து 3 நாட்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வழிகாட்டலின் கீழ் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது.

கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

டெங்கு தடுப்பு பரிசோதனை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதாரப் பிரிவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எப்.இஸட்.சராப்டீன் தலைமையில் இந்த டெங்கு பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

கல்முனையில் டெங்கு தடுப்பு பரிசோதனை முன்னெடுப்பு | National Dengue Eradication Week

இதன்போது, வீடுகள் வடிகான்கள் பொது இடங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, டெங்கு குடம்பிகள் இனங்கானப்பட்ட அழிக்கப்பட்டதுடன், குறித்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையிலும் பொதுச்சுகாதார பரிசோதரர்கள் சுற்றாடல் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் இப்பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

சடுதியாக அதிகரித்த தங்க விலை!

சடுதியாக அதிகரித்த தங்க விலை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery