குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறிய நாமல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
2010 - 2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட நிதி விவகாரங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம்
நாமல் ராஜபக்ச வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) காலை 9 மணியளவில் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, ஏன் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளீர்கள் என ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கு எனக்குத் தெரியாது. நானே போய்ப் பார்க்க வேண்டும் என நாமல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும். ஏனென்றால் தெரிந்தே பொய் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள் எனவும் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |