ஓட்டமாவடி அருகே இளைஞர்களை மோதித்தள்ளிய மர்ம வாகனம்!
ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் புனாணை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் மோதுண்டு இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு பத்து மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரண்டு இளைஞர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
மர்ம வாகனம்
விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் முற்றாகச்சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் தற்போதைக்கு வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் மோதுண்டு அவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

