மூதூர் - கங்குவேலி கிராமத்தில் உழவர் விழா!
மூதூர் -கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது, நேற்று(01) காலை கங்குவேலி கிராமத்தில் நடைபெற்றது.
மேலும், இதன்போது மாணவ மாணவிகளின் இன்னிசை நடனங்களுடன் அதிதிகள் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.
உழவர் விழா
அத்துடன், பொங்கல் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளர் கு.குணநாதன் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிலையில், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு கல்குடா இந்து குருமார் சங்கத்தினர், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கங்குவேலி அகத்தியர் கலை மாமன்ற உறுப்பினர்கள் ,கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





