முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசாங்கம்! அதிருப்தியில் திணரும் மக்கள்
அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன என சமூகம் சார் நடவடிக்கைகள் திறன் விருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மைய தலைவர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட் தெரிவித்துள்ளார்.
நேற்று (6) இரவு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது.
முஸ்லிம்கள் தங்களது உணர்வலைகளை கொண்டு தீர்மானம் எடுப்பவர்கள். இதிலும் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேல் நாட்டிற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனின் விவகாரத்திலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லீம் சமூகம் அசௌகரியத்தில் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் ஆற்றிய உரையை காணொளியில் பார்க்கலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |