பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி நியமனம்
புதிய இணைப்பு
10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி (Mohammad Rizvie Salih) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பிரகாரம் பொும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் ரியாஸ் சாலி பிரதி சபாநாயகராக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள முனீர் முளப்பர் பிரதி அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் பிரதிநிதி
மேலும் , நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி பொும்பாலும் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
இதன்போது, எமது அரசாங்கம் இலங்கையர்களை உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான அடையாளங்களை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |