கல்முனையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்!

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai Drugs
By Rakshana MA Nov 20, 2024 01:49 PM GMT
Rakshana MA

Rakshana MA

போதைப் பொருட்களை வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் இரண்டாவது முறையாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை (Kalmunai) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (20 ) அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த சந்தேக நபர், 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக கல்முனை பொலிஸார் தெரிவிக்கையில், இந்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மேலதிக விசாரணை

அத்துடன் குறித்த சந்தேக நபர் ஏற்கெனவே கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இன்னுமொருவருடன் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கல்முனையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்! | Suspect Arrested With Drugs In Kalmunai

எனினும், கைதான சந்தேக நபர் கல்முனை குடி மதிரிஸா வீதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளையின் தந்தை என்றும் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஐஸ் போதையுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரை இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW