முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Colombo Vijitha Herath Sri Lanka
By Laksi Nov 06, 2024 06:19 AM GMT
Laksi

Laksi

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என  அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரித்துள்ளார்.

அத்தோடு, குறித்த சட்டம் எந்த காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே விஜித ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சமயங்கள் சார்ந்த திருத்தம்

இந்த நிலையில்,  சமயங்கள் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடியே அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் எனவும் விஜித ஹேரத் தெரித்துள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Muslim Marriage Act Will Not Be Amended

இதேவேளை,கொழும்பிலும் கிராமப்புறங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரை நடவடிக்கைகளில் பங்குபற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும்  அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ,இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்படும் எனவும் விஜித ஹேரத் தெரித்துள்ளார்.

பலத்த மின்னல் தாக்கம்: 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம்: 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW