இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (PHOTOS)

Mullaitivu Sri Lanka K. Kader Masthan
By Sudaron May 31, 2023 07:37 PM GMT
Sudaron

Sudaron

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றைய தினம் (31) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (PHOTOS) | Mullaitivu District Coordination Committee Meeting

இதில் முக்கியமாக காணிப் பிரச்சினை , விவசாய நடவடிக்கை, கமநல அபிவிருத்தித் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் , சுகாதாரத் திணைக்களம், கல்வித் திணைக்களம், தனியார் மற்றும் அரச போக்குவரத்து , நன்னீர் மீன்பிடி, முல்லைத்தீவில் அமையவுள்ள பல்கலைக்கழக வளாகம், முல்லைத்தீவு பஸ் நிலைய வேலைத்திட்டம் முதலிய துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகநாதலிங்கம், றிசாட் பதூதீன், திலீபன், முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் .க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், வட மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், ஏணைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் , பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


GalleryGalleryGalleryGalleryGallery