அம்பாறையில் காணாமல் போகும் மோட்டார் வாகனங்கள் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Police Ampara Eastern Province Crime
By Rakshana MA Dec 25, 2024 11:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு சம்மாந்துறை(Sammanthurai) பொலிஸாரினால் பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தன.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

புலன் விசாரணை

இந்த நிலையில் குறித்த திருட்டுச்சம்பங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை அடையாளம் கண்டிருந்தனர்.

அம்பாறையில் காணாமல் போகும் மோட்டார் வாகனங்கள் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை | Motor Vehicles Disappearing In Amparai

இந்த நிலையில் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய, படத்திலுள்ள குறித்த சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும், விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் தொடர்பில் தகவலை தெரிவிக்க, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 0672 260 222 எனும் இலக்கத்தினை அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அனர்த்த முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்

அனர்த்த முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்

கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW