மூதூரில் ஒரு வாரம் கடந்தும் வீடு திரும்பாத தாய் : தேடுதலில் பொலிஸார்
மூதூரில் வசிக்கும் 03 பிள்ளைகளின் தாய் காணாமல் போய் 7 நாட்கள் ஆகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தாய்
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் காணாமல் போன பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அன்றைய தினம் காணாமல் போன 3 பிள்ளைகளின் தாயார் இன்னும் வீடு வரவில்லை என்பதுடன் இப்பெண் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்திருந்தால் உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு 0767824592, 0753251281 கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

