ஈரானின் மீது உளவியல் நெருக்கடிகளை கட்டவிழ்க்கும் மொசாட்..!
ஈரானிய தளபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கொன்றுவிட இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தனது முதல் தாக்குதலைத் தொடங்கியது.
இதில் இராணுவத் தலைவர்கள் மற்றும் உயர் அணு விஞ்ஞானிகளை படுகொலை செய்யப்பட்டனர்.
தொடரும் தாக்குதல்கள்
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தொடர்ச்சியான தாக்குதலை ஆரம்பித்தது.
இந்நிலையில் போர் பதற்றம் அதி உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஈரானில் முதல் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் ஈரானின் முடிவெடுக்கும் மனநிலையை சீர்குலைக்கும் வகையில், அங்குள்ள தளபதிகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், பாரசீக மொழி பேசும் மொசாட் உளவாளிகள் ஈரானில் 20க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ஈரானின் உயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனியின் ஆட்சியைக் கைவிடாவிட்டால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளனர்.
உளவியல் நெருக்கடி
மேலும், ஈரானின் ஒரு மூத்த தளபதியிடம் மொசாட் உளவாளி ஒருவர், உங்கள் மனைவி மற்றும் குழந்தையுடன் தப்பிக்க உங்களுக்கு 12 மணிநேரம் உள்ளது.
இல்லையென்றால், நீங்கள் தற்போது எங்கள் பட்டியலில் இருக்கிறீர்கள் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த தளபதியும் மொசாட் உளவாளியின் மிரட்டலுக்கு பணிந்தது போன்று நடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தற்போதும் அந்த தளபதி உயிருடன் இருக்கிறார் என்பதை Washington Post செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
உண்மையில் மொசாட் முன்னெடுத்த உளவியல் நெருக்கடி ஈரானிய தளபதிகளிடம் செல்லுபடியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |