மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்!

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 23, 2025 11:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa) - வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் கடித்ததில் 6 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஒடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத அச்சத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

குரங்குகளின் தாக்குதல் 

நேற்றைய தினம் (22) வந்தாறுமூலை பேக் வீதியில் வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்! | Monkey Attacks In Batticaloa Town

இவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 6 பேர் குரங்கு கடிக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்த போதும் கந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாகி வருகின்றது.

இலங்கையில் மின்னணு அடையாள அட்டை பயன்பாடு குறித்து வெளியான செய்தி

இலங்கையில் மின்னணு அடையாள அட்டை பயன்பாடு குறித்து வெளியான செய்தி

மக்கள் விசனம்

மேலும், மாமரம், பலாமரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகின்றது. அவ்வாறே அந்த பகுதியில் பயிரடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்து வருகின்றன.

மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்! | Monkey Attacks In Batticaloa Town

அத்துடன், வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி கடித்ததில் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கியதுடன் அச்சத்தில் உள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஒரு நாளைக்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் ஒரு நாளைக்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

சம்மாந்துறையில் விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

சம்மாந்துறையில் விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW