விவசாயிகளின் கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ள பணம்
பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான இழப்பீடாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை இதுவரை விவசாயிகளின் கணக்குகளில் ரூ. 18.5 மில்லியன் தொகையை வரவு வைத்துள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி(Bemasiri Jasingarachi) தெரிவித்துள்ளார்.
மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 9,511 விவசாயிகளுக்குச் சொந்தமான 13,392 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பயிர் சேத இழப்பீடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளில் ஒரு பகுதியினருக்கும் இந்தப் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை, அனுராதபுரம், மன்னார் மாவட்டங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மீதமுள்ள விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடு இந்த மாத இறுதிக்குள் உடனடியாக வழங்கப்படும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு(2024) நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்போகத்தில் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்குவது ஜனவரி 30 ஆம் திகதி தொடங்கியது.
இழப்பீட்டுத் தொகை
மேலும், இந்த மாதம் 28 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் '1918' என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வேளாண் மற்றும் விவசாய காப்புறுதி சபை அறிவித்துள்ளது.
அத்துடன், இழப்பீடு வழங்குவதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, வேளாண்மை மற்றும் விவசாய காப்புறுதி சபை இந்த இழப்பீட்டுத் தொகையை நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |