இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு
ஶ்ரீ லங்கா ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
இரு நாட்டு உறவு
இதனையடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்த பின்னர், இரு நாட்டு மக்களின் நலனுக்காக தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர்.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |