பாடசாலை பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

Ministry of Education Sri Lankan Peoples Education
By Chandramathi Nov 14, 2025 02:27 PM GMT
Chandramathi

Chandramathi

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் 

அதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை! | Ministry Of Education School Examinations

அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 10 முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரையும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் 2026 டிசம்பர் 08 முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையும் இடம்பெறுமென தெரிவித்துள்ளார்.  

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பை கடுமையாக சாடிய மரிக்கார்!

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பை கடுமையாக சாடிய மரிக்கார்!