அரசாங்கத்தின் வரி அதிகரிப்பை கடுமையாக சாடிய மரிக்கார்!
மின்சார கட்டணங்களை அதிகரித்தும் நீர் கட்டணங்களை அதிகரித்தும் வரிக்கு மேல் வரிகளை விதித்தும், வருமானம் திரட்டுவதற்கு பெரிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை தேவை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
வரிகளை விதித்து அரச வருமானத்தை அதிகரிப்பது ஓர் பாரிய விடயம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
வரி அதிகரிப்பு
4990 பில்லியன் ரூபாய் அரச வருமானத்தை 5100 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுவதாகவும் இது முழுக்க முழுக்க மக்கள் மீது வரிச் சுமையை திணிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரி வருமானத்தை அதிகரிப்பது பொருத்தமுடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசாங்க செலவுகளை குறைத்து வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை வீட்டில் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்யும் அம்மாவும் செய்வார் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.