பால் தேநீர் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Food Shortages Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Mar 31, 2025 11:08 AM GMT
Laksi

Laksi

பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த விலை அதிகரிப்பானது இன்று (31) நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பால் மாவின் விலை அதிகரிப்பால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

விலையில் மாற்றம்

மேலும் அவர் தெரிவிக்கையில்,பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

பால் தேநீர் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Milk Tea And Cheese Price

இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொத்து உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

வாழைச்சேனையில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW