இடி மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் இடி, மின்னல் ஏற்படுவது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு 11.30 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகளவில் மின்னல் ஏற்படுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
தேவையான நடவடிக்கை
இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு மக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |