நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு
நாட்டிலுள்ள பல அரச வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன.
மருந்து தட்டுப்பாடு
கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை.
மேலும், வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை. நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றிலும் கூட பிரச்சினை இருப்பதாக எங்களுக்குக் தகவல்கள் கிடைக்கின்றன.
இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம்.
சில மருந்துப் பற்றாக்குறைகள் வைத்தியசாலை அமைப்பிலேயே உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |