கல்முனையில் மத்தியஸ்த சபை தொடர்பான பயிற்சி செயலமர்வு
பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரைமப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீதி அமைச்சினால் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் மாஜிதா ஒருங்கிணைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 3, 5, 6, ஆம் திகதிகள் பயிற்சி செயலமர்வானது நடைபெற்று 3 நாட்களுடன் நிறைவுற்றிருந்தது.
பயிற்சி செயலமர்வு
இந்த நிலையில், இந்த பயிற்சி செயலமர்வின் மூலம் மாணவர்கள் மத்தியஸ்தம் தொடர்பில் முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டதுடன் எதிர்கால மாணவ சமுதாயம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலை மத்தியஸ்தம், மத்தியஸ்த வரலாறு ,முரண்பாடு ,முரண்பாட்டு தீர்வின் முக்கியத்துவம், தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்த படிமுறைகள், பாடசாலை மத்தியஸ்தத்தில் மாணவர்களின் பங்கு என்பன தெளிவூட்டப்பட்டன.
மேலும், இந்த பயிற்சி செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபீர் உட்பட பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக நீதி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/6bfbffa1-d728-4a0a-bdd7-bf0eb7486774/25-67a4aa1f26a63.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/72acd734-c733-458e-aa7b-d4ce1cbe190a/25-67a4aa1fafc44.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f1162c50-8ade-40e7-8f78-5ed170670db5/25-67a4aa2046599.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/70d68100-06e8-49bd-adff-3e3b6c9cd3e8/25-67a4aa20d8ef2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c54114a5-2824-4197-8e32-26ef6ee50c21/25-67a4aa216e582.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cebcf38d-01a7-4175-bd0f-c6a7e41bc0e5/25-67a4aa22053c5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b5395a49-ec9e-47ff-be85-53b2ac8a6f76/25-67a4aa22946ba.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c7bfe083-9af0-476c-8822-d65435f2d9d6/25-67a4aa2330beb.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/def18319-220f-4d65-aaf6-4ecdf3c7d122/25-67a4aa23be4c5.webp)