நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவல்களை இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்
அத்தோடு, இன்று பிற்பகல் ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச ஊடகங்களின் பிரதானிகள் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை முதல் அமைச்சர் மட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்புகள் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |