எதிர்வரும் 6ஆம் திகதி விடுமுறை! வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிவித்தல்
மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரச்சார நடவடிக்கை அத்துடன் தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |