சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்
சாய்ந்மதருது - மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் நேற்று (03) சனிக்கிழமை காலை 06.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரான வைத்தியர் எம்.எச்.சனூஸ் காரியப்பர் தலைமையில், இச்சிரமதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மாபெரும் சிரமதானம்
நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.முஹம்மட் முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம்.முஸ்தபா, பிரதித் தலைவர் தொழிலதிபர் எம்.எம்.எம்.முபாரக், உதவித் தலைவர் மௌலவி எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி), உதவிச் செயலாளர் ஏ. பர்ஹாம், உதவிப் பொருளாளர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம்.நஜீம் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், தோட்ட பராமரிப்புக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர்களான ஏ.ஜெஸ்மீர், எம்.ஐ. நஜீம் உள்ளிட்ட பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




