பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கும் தொழிலாளர்கள்
நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக பாரிய சவாலுக்கு உள்ளாகியது தொழிலாளர் வர்க்கமே ஆகும் என சம்மாந்துறையில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எல்.ஏ.நஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டவர்கள் தொழிலாளர்கள் தான். நாளுக்கு நாள் அவர்கள் மீதான அழுத்தங்களும் தற்போது அதிகமாக உள்ளன.
மே 1ஆம் திகதி..
அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுபடுத்துவதற்கும் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாமும் நமது நாட்டின் பொருளாதார நிலையும் உள்ளது என்பதை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"வர்க்கப் போராட்டங்களின் வரலாறு தான் மனிதகுல வரலாறு” என்கிறார் பேரறிவாளர் காரல் மார்க்ஸ்.
அந்த வகையில் தொழிலாளி வர்க்கம் 1886 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உழைக்கும் மக்கள் அமைப்புரீதியாக அணி திரண்டு வேலை நேரத்தை முறைப்படுத்தும் கோரிக்கைகளை முன் வைத்து மே முதல் நாள் ஊர்வலம் நடத்தியது.
8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்பதாக வரையறுத்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
நாள்தோறும் 20 மணி நேரம் வரையிலும் வேலை வாங்கி வந்த, மூலதன சக்திகளும், அவர்களது அரசும், காவல்துறையும், கோரிக்கை வைத்து ஊர்வலம் போன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.
தொழிலாளர்கள் தினம்
தொழிலாளர்களை அணிதிரட்டி முன்னணி தலைவர்களை தூக்கில் போட்டு, படுகொலை செய்தது.
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை தீவிரமாக்க ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைக்கும் மக்களின் உரிமை தினமாக, உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை நாளாக கொண்டாட வேண்டும் என அறை கூவி அழைத்தது.
அந்த வகையில் இலங்கையிலும் உலகலாவிய ரீதியிலும் கொண்டாடப்படும் மே தினமானது உழைக்கும் மக்கள் அனைவரினதும் அபிலசைகள் நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது மே தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |