சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Apr 30, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தியை வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எந்தவொரு அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதனை தொடர்ந்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் இன்றைய தினம் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுகப்படவில்லை என வலியுறுத்தியுள்ளது.

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

பரவும் போலி செய்தி

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Warning Issued Fake News Spreading On Social Media

குறித்த போலிச்செய்தியானது, உயர் மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, எவரும் வெளியில் (திறந்தவெளியில்) செல்லக்கூடாது,

ஏனெனில் வளிமண்டலவியல் திணைக்களம் 45°C முதல் 55°C வரை வெப்பநிலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!

வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எவருக்காவது சுவாசிப்பதில் சிரமம் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், அவர்கள் உடனடியாக வைத்தியர் ஒருவரை அணுக வேண்டும்.

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Warning Issued Fake News Spreading On Social Media

மேலும், சிவில் பாதுகாப்பு திணைக்களம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த போலிச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் மக்களை அச்சமடைய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல்

சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW