மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கான சர்வமத பிரார்த்தனை

Ampara Climate Change Eastern Province
By Laksi Dec 09, 2024 07:53 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara)- மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிராத்தனையானது நேற்று (8) மாலை காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியில் தலைவர் சிவஸ்ரீ க.வி.பிரமீன் தலைமையில் நடைபெற்றது.

இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் மனிதநேயமும் அன்பும் உடையவர்களாக நல்லிணக்கத்தோடு எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதற்காக நடைபெற்ற நிகழ்வானது சர்வமத தலைவர்களின் பிரார்த்தனையோடு ஆரம்பமானது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி

பிரார்த்தனை

பின்னர் அதிதிகள் உரையை தொடர்ந்து அனைவரும் இணைந்து அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு உயிர்களை காக்க களப்பணி செய்த வீரர்களும் நினைவு கூரப்பட்டனர்.

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கான சர்வமத பிரார்த்தனை | Mavadipalli Tractor Accident Interfaith Prayer

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தநிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள், அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் சிவ ஜெகராஜன் , கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் , மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ், முன்னாள் அரசாங்க அதிபர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி உபுல் சாணக, ஆலய பரிபாலன சபையினர், இந்துமாமன்ற உறுப்பினர்கள், உலமா சபைகளின் நிர்வாகிகள், ராவணா அமைப்பினர், உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர் - கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர் - கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery