பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த பயங்கரம்: தொடரும் விசாரணை
காலி - ஜிந்தோட்டையில் உள்ள கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குருந்துவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தி குத்து தாக்குதல்
போதைபொருள் பொதி ஒன்று தொடர்பாக உருவான வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உயிழந்துள்ளவரும் தற்போது காவலில் உள்ள 28 வயதுடைய தாக்குதலாளியும் நன்கு அறியப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்கள் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |