மருதமுனையில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime Law and Order
By Rakshana MA Apr 23, 2025 09:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22) இரவு பெரியநீலாவணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருதமுனையில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது | Man Arrested With Drug Pills In Ampara

இதன்போது சுமார் 700 க்கும் அதிகமான போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைதானார். 

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடா..! வெளியான தகவல்

இலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடா..! வெளியான தகவல்

சிக்குன்குனியா பரவும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கை

சிக்குன்குனியா பரவும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW