மருதமுனையில் சிறப்பு அதிரடிப் படையினரால் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province Crime Kalmunai
By Rakshana MA Jan 18, 2025 06:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை(Maruthamunai) பிரதேச வைத்தியசாலை வீதியில் அதிரடிப்படையினரால் ஐஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(17) இரவு 10.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மருதமுனை கடற்கரைப் பகுதிகளில் வேகமாகும் கடலரிப்புப் பாதிப்பு!

மருதமுனை கடற்கரைப் பகுதிகளில் வேகமாகும் கடலரிப்புப் பாதிப்பு!

மேலதிக விசாரணை 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பெரியநீலாவணை 02, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மருதமுனையில் சிறப்பு அதிரடிப் படையினரால் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது | Man Arrested By Special Action Force With Drugs

அத்துடன், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW