விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறினார் மகிந்த...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனிவரும் நாட்களில் அங்கிருந்த தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜேராம அரச இல்லத்தில் இருந்து
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் அந்த இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே தங்களுடைய இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது விஜேராம அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.




