உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 22, 2024 08:01 AM GMT
Mayuri

Mayuri

திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய கூடிய விரைவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி வழக்கு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Local Government Elections To Be Held Soon

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 4 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW