உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தகுதியான வாக்காளர்கள் தொடர்பிலான அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க 17 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் துணை மற்றும் உதவித் தேர்தல் ஆணையர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நேற்று(08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தகுதியான வாக்காளர்கள்
இந்நிலையில், 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் கோருதல் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 4,872 பிரிவுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்படும். மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |